கூட்டணியே கிடையாது... 2 பக்கமும் வாள்வைத்து போராடுவோம்... சீமான்!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அதில் பேசிய சீமான், “மின்கட்டணம் குறையவில்லை. சொத்து வரி குறையவில்லை. கேளிக்கை வரி நான்கு சதவீதம் குறைகிறது, இது யாருக்கு பயன் தரும்.இந்த நாட்டுக்கா? அவர்களின் வீட்டுக்கா?
திரைத்துறை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது; வேறு யாரும் படம் எடுக்க முடியுமா? படம் எடுத்தால் வெளியிட முடியுமா? திரையரங்கு தருவீர்களா? இந்த நாட்டில் இருக்கும் அரசியலை மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். தீமைக்கு தீமை மாற்று அல்ல... அதனால அவங்கள ஒழிக்கணும்... எங்களுக்கு கூட்டணி என்றெல்லாம் எதுவும் கிடையாது.
நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். பாஜகவை அகற்ற வேண்டும் என்று திமுக நினைக்கிறது, திமுகவை அகற்ற அதிமுக நினைக்கிறது. ஆனால் நாங்கள் இவர்கள் எல்லாரையும் அகற்ற வேண்டும் என இரண்டு பக்கமும் வாள் வைத்து போராடுகிறோம்” என்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!