இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை... எப்போ குறைய வாய்ப்பு.. நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்!?

 
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

விடுமுறைக்கு பிறகான வர்த்தகத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலையில் எந்த விதமான மாற்றமும் இன்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,500யைக் கடந்த நிலையில், மேலும் உயருமா? அல்லது குறைய வாய்ப்பிருக்கா? என்பதே இல்லத்தரசிகளின் பெரும் கேள்வியாக உள்ளது.

தங்கத்தில் முதலீடு என்பது பல வருடங்களாகவே பாரம்பரிய, பாதுகாப்பான பழக்கமாகவே இருந்து வருகிறது. கொரோனா காலத்தில் பலர் தங்களது வேலைகளை இழந்திருந்த நிலையிலும் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தனர். ஆனால் அந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக காணப்பட்டது.

தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு.

அதிர்ச்சி!! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை!! சவரனுக்கு ரூ.336 அதிகரிப்பு!!

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல், ரூ.5,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,628-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல், ரூ.4,628-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நகைப்பிரியர்கள் அதிர்ச்சி! அதிரடியாக உயர்ந்த  தங்கத்தின் விலை!

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 81,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, ரூ.81,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.81.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க  பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில்  குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web