"அதிமுகவிடம் எந்த டிமாண்டும் இல்லை... நானும் அண்ணாமலையும் அண்ணன் தம்பி உறவுடன் இருக்கிறோம்" - நயினார் நாகேந்திரன்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், நயினார் நாகேந்திரனின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பாஜக மற்றும் அதிமுக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு அதிமுகவிடம் எந்தவிதமான 'டிமாண்ட்'களும் (நிபந்தனைகளும்) இல்லை. கூட்டணியில் சுமூகமான உறவு நீடிக்கிறது" என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

தவெக நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாகச் செங்கோட்டையன் பேசிய கருத்தைக் குறிப்பிட்டு, "முதலில் செங்கோட்டையன் தனது தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவாரா என்று பார்ப்போம்" என விமர்சித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வு குறித்துத் தெளிவுபடுத்தினார்.
"தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருப்பார்," என்று அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இது பாஜக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளிடையே நிலவி வந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் இடையே 'ஆட்சியில் பங்கு' குறித்த விவாதங்கள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்திற்கு (விஜய் கட்சி) மாறுமா? கலைஞர் முதல்வராக இருந்தபோதே நடக்காத காரியம் இப்போது நடக்குமா?" எனச் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

மதுரையில் நடைபெற இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்: பிப்ரவரி 28-க்கு பதிலாக மார்ச் 1-ஆம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
