“சிலையில் பொட்டு தங்கம் கூட கிடையாது” - ஐஐடி அறிக்கையால் அலறும் அறநிலையத்துறை... 2,496 கிராம் தங்கமும் அபகரிப்பு!!

 
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் சிலை

ஆயிரம் ஆண்டு பழமையான சோமாஸ்கந்தர் சிலை சேதமடைந்ததை அடுத்து, 2015-ஆம் ஆண்டு புதிய சிலைகள் செய்யப்பட்டன. ஆனால், அதில் தங்கம் சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இப்போது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

புதிய சிலைகள் செய்யும்போது அதில் 5% தங்கம் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதி. இதற்காகப் பக்தர்களிடம் இருந்து சுமார் 312 சவரன் தங்கம் நன்கொடையாகப் பெறப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழுவினர் இந்தப் புதிய சிலைகளை நவீனக் கருவிகள் கொண்டு ஆய்வு செய்தனர். அதன் முடிவில், அந்தச் சிலைகளில் துளி அளவு கூட தங்கம் இல்லை என்பது உறுதியானது.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர்

தங்கம் பெறப்பட்டதற்குப் ரசீது வழங்கப்படவில்லை, சிலை செய்யும் போது வீடியோ எடுக்கப்படவில்லை என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இந்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் சிவகாஞ்சி போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்தபதி முத்தையா, முன்னாள் செயல் அலுவலர் முருகேசன், அர்ச்சகர் ராஜப்பா உட்பட 9 பேர் மீது வழக்கு உள்ளது. அறநிலையத்துறையின் முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் பச்சையம்மன் பச்சை அம்மன் கோவில் கோபுரம் கும்பாபிஷேகம்

தற்போது 468 (போலி ஆவணங்கள் தயாரித்தல்), 380(2) (கோவில் சிலைகளைத் திருடுதல்) போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் திருத்தப்பட்ட எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அந்தச் சிலைகள் தற்போது கும்பகோணத்தில் இருந்து காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு, ஏகாம்பரநாதர் கோவில் சிலை பாதுகாப்பு மையத்தில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் எனப் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்கம் வழங்கிய பக்தர்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்து அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!