பிரிவினை வாதத்தை தூண்டும் மாநில சுயாட்சி தேவையில்லை... பாஜக நயினார் நாகேந்திரன் பேட்டி!

 
நயினார் நாகேந்திரன்

பிரிவினை வாதத்தை தூண்டும் மாநில சுயாட்சி நமக்குத் தேவையில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

நயினார் நாகேந்திரன்

சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் 255வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்த போது தமிழகத்தில் இருந்து வரும் பல கடிதத்தில் கையெழுத்து ஆங்கிலத்தில் உள்ளது என்று தெரிவித்தார். அதன் எதிரொலியாக இன்று தமிழில் மட்டுமே அரசாணை வெளியிடப்படும். தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

மாநில உரிமைகள் பறிக்கக்கூடாது என்பதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், மாநில சுயாட்சி என்பது பிரிவினை வாதத்தை தூண்டும். மாநில சுயாட்சி என்பது நமக்குத் தேவையில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை இதை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன். மக்களுக்கு காவல்துறையை பார்த்து பயம் இல்லை.

 நயினார் நாகேந்திரன்

முன்பு அம்மா அரசு இருக்கும் போது காவல்துறை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். இப்போது  காவல் துறையின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர், போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது, டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது இதையெல்லாம் மாற்றுவதற்கு பதிலாக  மாநில சுயாட்சி என்று மக்களை திசை திருப்புகின்றனர் என்று தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web