"சாதி, மதவெறிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை!" - சமத்துவ உலகமாக மாற்ற கி.வீரமணி அறைகூவல்

 
கி.வீரமணி

சமூகத்தில் நிலவும் சாதியப் பாகுபாடுகள் மற்றும் மதவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே சின்னரெட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டச் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாருக்கு வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் வழியில் செயல்படும் தமிழக அரசு, இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, அந்தப் பெண்ணுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கு அருகில் ஆர்.எஸ்.எஸ் கிளை நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களிடையே மதவெறியைத் தூண்டும் இத்தகைய செயல்களைத் தடுத்த காவல்துறையினரைப் பாராட்டினார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் சாதிவெறிக்கும், மதவெறிக்கும் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் கண்ட கனவான, சாதி-மதப் பாகுபாடுகளற்ற ஒரு "சமத்துவ உலகமாக" தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது இலக்காக இருக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!