எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை... சூர்யாவின் புறநானூறு கதைதான் பராசக்தி" - சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்!
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்து, பின்னர் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட 'புறநானூறு' படத்தின் அதே இந்தி எதிர்ப்புப் போராட்டக் கருவைத்தான் 'பராசக்தி' படம் பேசுகிறது என்பதை சிவகார்த்திகேயன் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து சிவகார்த்திகேயன் தனது பேட்டியில், "சூர்யா சார் நடிக்க இருந்த புறநானூறு படத்தின் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு தான் பராசக்தி உருவாகியுள்ளது. தணிக்கைக் குழுவினர் எதிர்பாராத இடங்களில் 25 இடங்களுக்கு மேல் கட் கொடுத்தனர். ஆனாலும் படத்தின் ஆன்மா சிதையாமல் மக்களிடம் கருத்தைச் கொண்டு சேர்ப்போம்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

"விஜய் அண்ணாவின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது வருத்தமளிக்கிறது. அவர் படம் எப்போது வந்தாலும் அது ரசிகர்களுக்குப் பெரிய கொண்டாட்டம் தான்" எனத் தனது அன்பை வெளிப்படுத்தினார். படத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவோ அல்லது எதிர்ப்போ கிடையாது என்றும், இது ஒரு வரலாற்றுப் பதிவு மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
"ட்ரம்ப் முதல் உள்ளூர் நபர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். முகம் தெரியாத நபர்களின் எதிர்மறை கருத்துகளை நான் கண்டுக் கொள்வதில்லை" எனத் துணிச்சலாகப் பதிலளித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
