5,000க்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை... கல்வித் துறையின் அதிர்ச்சி அறிக்கை!!

 
வகுப்பறை

நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை மத்திய கல்வித் துறை நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் உள்ள சுமார் 10.13 லட்சம் அரசுப் பள்ளிகளில், 5,149 பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் ஒரு மாணவர் கூடச் சேரவில்லை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 'பூஜ்ஜியம்' என்ற நிலையில் உள்ளது. குறிப்பாக, தெலங்கானா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில்தான் இத்தகைய பள்ளிகள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வகுப்பறை

மறுபுறம், மாணவர்கள் இல்லாத இந்தப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டிருப்பது பெரும் முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2022-23 கல்வியாண்டில், 10-க்கும் குறைவான மாணவர்கள் அல்லது மாணவர்களே இல்லாத பள்ளிகளில் 1.26 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், தற்போது 2025-26 கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 1.44 லட்சமாக உயர்ந்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வரும் நிலையிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்து வருவது கல்வித் துறையின் திட்டமிடலில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

வகுப்பறை

அரசுப் பள்ளிகளில் போதியக் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது அல்லது தனியார் பள்ளிகளின் மீதான மோகம் போன்ற காரணங்களால் மாணவர் சேர்க்கை சரிந்து வருவதாகக் கருதப்படுகிறது. மாணவர்களே இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்றி வருவது அரசின் நிதி ஆதாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக அமையும் என்று கல்வி ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் சிக்கலைக் களைந்து, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், ஆசிரியர்களைத் தேவைப்படும் இடங்களுக்கு இடமாற்றம் செய்யவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!