காவலர்கள் மீது மிளகாய்ப்பொடி வீசி கைதிகளுக்கு அரிவாள் வெட்டு..!!

 
பெண்கள்

திண்டுக்கல்லில் ஒரு கொலைக்கு பலிக்கு பலியாக போலீசார் முன்னிலையில் தாக்குதல் நடத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த சின்னதம்பி என்பவர் கடந்த மார்ச் 2ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மேட்டுப்பட்டியை சேர்ந்த விஷ்ணு (29), யுவராஜ் (28), 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதில் 2 பெண்களும் மதுரை மத்திய சிறையிலும், விஷ்ணு, யுவராஜ் உள்ளிட்ட 4 பேரும் விருதுநகர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். விஷ்ணு மற்றும் யுவராஜுக்கு கையில் காயம் இருந்ததால் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்வதற்காக 4 நாட்களுக்கு முன்னர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் சிலம்பரசன் மற்றும் அழகுராஜா பாதுகாவலராக இருந்துள்ளனர். 

பெண்கள்

இந்நிலையில், நேற்றிரவு கைதிகள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் 4ஆவது மாடிக்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைதிகள் இருவரையும் கொலை செய்ய பாய்ந்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சிலம்பரசன், அழகுராஜா மீது மிளகாய் பொடியை தூவி விட்டு, சிகிச்சையில் இருந்த கைதிகள் விஷ்ணு, யுவராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

அவர்களை காப்பாற்ற காவலர்கள் போராடினர். இதில் கைதிகளில் ஒருவரை மீட்டு, பக்கத்து அறையில் தள்ளி பூட்டியுள்ளார். காவலர் சிலம்பரசனிடம் துப்பாக்கி இருந்தபோதும், அந்த அறையில் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பலர் இருந்ததால் துப்பாக்கியால் சுடுவதற்கு தயங்கினார். இதனால் துப்பாக்கியை திருப்பிப் பிடித்து கொலை செய்ய வந்த கும்பலை சரமாரியாக தாக்கியுள்ளார். 

பெண்கள்

இதை பார்த்த நோயாளிகள் சிலர் அலறியடித்து வெளியே ஓடி விட்டனர். அங்கு நோயாளிகள் இல்லாததால் இனி துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று காவலர் எச்சரித்தால், முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web