இன்று முதல் ₹3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு - ரேஷன் ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது!
சென்னை ஆலந்தூர், நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் இன்று காலை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பரிசைப் பொதுமக்களுக்கு வழங்கித் தொடங்கி வைக்கிறார்.
ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கத் தொகை ₹3,000 (நேரடியாகக் கையில் வழங்கப்படும்)., 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு., வேட்டி மற்றும் சேலை (தேவைப்படும் பயனாளிகளுக்கு) வழங்கப்படுகிறது.

விநியோக முறையும் விதிகளும்:
ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மக்கள் கடைக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
மலைவாழ் மக்கள் நலனுக்காக அவர்கள் அதிகாலையிலேயே வேலைக்குச் செல்வதால், மலைப்பகுதி ரேஷன் கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்படும். ₹3,000 பணத்தைப் பயனாளிகள் முன்னிலையில் எண்ணிக் காண்பித்து வெளிப்படையாக வழங்க வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை டோக்கன் கிடைக்காதவர்கள், பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அந்தந்த ரேஷன் கடை ஊழியர்களை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் சுமார் 2.23 கோடி அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர். இந்த ஆண்டு ரொக்கத் தொகை ₹3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், இதற்காகத் தமிழக அரசு சுமார் ₹6,700 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கியுள்ளது. விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பசுமையான கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத் துறை மூலம் உடனுக்குடன் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. பொங்கல் பரிசு விநியோகம் முடியும் வரை ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
