பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது... திருமாவளவன் பேட்டி

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். இது குறித்து திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிகவின் நிலைப்பாடு என்ன என்பது யூகமான கேள்வி. அப்படி ஒரு நிலை வந்தால் அப்போது அது குறித்து கருத்துக் கூறுகிறேன். பாஜக, பாமக இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் எங்களுக்கு எந்தக் கசப்பும் இல்லை. ஆனால் அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் வேண்டுகோள்.குறைந்த தொகுதி கொடுத்தாலும் திமுக கூட்டணியில் நாங்கள் இருப்போம் எனக் கூறுவதால் எங்கள் தொண்டா்கள் சோா்வடைய மாட்டாா்கள். எங்கள் தொண்டா்களை கொள்கை அடிப்படையில் செழுமைப்படுத்தி உள்ளோம்.
தொகுதி எண்ணிக்கை குறித்து எங்கள் கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை; இனியும் வராது. எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவாா்த்தையின்போது பாா்த்துக் கொள்வோம். இந்த முறை பேச்சுவாா்த்தையில் நல்ல பலன் இருக்கும் என நம்புகிறோம்.திமுக கூட்டணியை மட்டும் குறிவைத்து பலா் கேள்வி எழுப்புகிறாா்கள். அதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன. திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிலா் தொடா்ந்து இதைக் கேட்கிறாா்கள். அது தேவையில்லாதது” என்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!