இந்த சம்மர்ல பவர்கட் நிச்சயமா இருக்காது... அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

தமிழகத்தின் பல பகுதிகளில் கோடைவெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. ஆண்டுக்கு மின் பயன்பாடு 1 லட்சத்து 13000 மில்லியன் யூனிட் என்ற அளவில் உள்ளது. கோடைகாலத்தில் அதிகபட்சமாக 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படலாம். கோடைகாலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 6000 மெகா வாட் அளவுக்கு கூடுதலாக மின்சாரம் தேவைப்படும். ஆகையால் டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒரு யூனிட் 8 அல்லது 9 க்கு வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. எங்கெல்லாம் ஓவர்லோடு மற்றும் லோ வோல்டேஜ் இருக்கிறதோ அதையெல்லாம் கவனத்தில் கொண்டு புதிய பகுதியில் 78000 மின்மாற்றிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு அவற்றில் 250 துணை மின் நிலையங்களுக்கு நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டுத் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இப்பொழுது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மின்சாரத்துறையில் மூன்றில் 1 ஒரு பங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆகையால் மின்சாரத்துறையில் உள்ள அவசியமான காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 2030க்குள் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தை சமாளிப்பதற்கு மின்வார வாரியம் தயாராக இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!