வெயிலும் இருக்கு பனியும் இருக்கு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° – 3° C அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளைகளில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் பிப்ரவரி 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° -4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிப்ரவரி 15ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை பிப்ரவரி 16ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
