அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் ஊதிய உயர்வு கோரி என்டிபிஎல் அனல் மின்நிலையம் முன்பாக ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீதிமன்ற உத்தரவின்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வட்டாட்சியர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்ட அம்சங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல் மின்நிலையம் முன்பாக ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் எஸ்.அப்பா துரை தலைமை வகித்தார். இதில், சிஐடியூ மாநிலச் செயலர் ஆர்.ரசல், மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, மின்ஊழியர் மத்திய அமைப்பு தெர்மல் செயலர் கணபதி சுரேஷ் , நிர்வாகிகள் சங்கரன், பென்சில், என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!