சுக்கிரன் பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிகள் இவை தான்!

 
சுக்கிரன்


நவக்கிரகங்களில் ஒவ்வொன்றும்  குறிப்பிட்ட காலத்தில் மாற்றம் அடையும். அதாவது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும். அப்போது அதன் தாக்கம் மற்ற 12 ராசிகளிலும் இருக்கும்.  நவக்கிரகங்களில் ஆடம்பரம், காதல், செல்வம், புகழ் அனைத்திலும் உச்சம் பெற்று இருப்பவர் சுக்கிரன் தான். இவர் தற்போது  இன்று  பிப்ரவரி 15ம் தேதி முதல் மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இதன் தாக்கம் மற்ற ராசிகளில் இருக்கும் என்றாலும் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் ராஜயோகம் பெறப் போகிறார்கள். இவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் நல்ல வளர்ச்சி காணலாம். தொட்ட காரியம் துலங்கும். சுபகாரியம் கைகூடும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். பணம் பல வழிகளில் வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம். குறிப்பாக ராஜ வாழ்க்கை வாழலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள்.  மீனம் செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக அமையப் போகிறது என்பதை இந்தப் பதிவில் காணலாம். 

ரிஷபம்
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களே உங்களின் 11வது வீட்டிற்கு சுக்கிரன் செல்ல இருக்கிறார். இதனால் வருமானம் அதிகரிக்க போகிறது. குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை உருவாகும்  . பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி உங்களுக்கு தான்.  பங்கு சந்தையில் முதலீட்டில் நல்ல லாபம் காணலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள். 


கன்னி: கன்னி ராசிக்காரர்களே உங்க ஜாதக கட்டத்தின்  7 வது இடத்திற்கு சுக்கிரன் செல்ல இருக்கிறார். இதனால்  இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். சுபகாரியம் கைகூடும். தொலை தூர செய்திகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் பொருளாதார நிலை உயரும். அலுவலகத்தில் பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம் மேம்படும். இந்த காலகட்டத்தில் ராஜயோகம் இருப்பதால் திடீர் பணவரவு நிச்சயம். 

கும்பம்
கும்பம்: கும்ப ராசிக்காரர்களே , உங்களின் கட்டத்தில்  2 வது இடத்திற்கு சுக்கிரன்  செல்ல இருக்கிறார்.  2ம் இடம் செல்வத்திற்கான அதிபதி. திடீர் பணவரவு நிச்சயம். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் , வாங்கல் அமோகமாக இருக்கும். குறைவான செலவில் அதிக லாபம் பெறலாம். பேச்சால் மற்றவர்களின் மனதை எளிதில் வெற்றி பெறலாம். இந்த காலகட்டத்தில் பழைய பாக்கிகள் வீடு தேடி வரும். சேமிப்புக்கள் அதிகரிக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை நிச்சயம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web