நெல்லை தூத்துக்குடி உட்பட இந்த மாவட்டங்களில் அடுத்த 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

 
கன மழை

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியானது இன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

தமிழகத்தில் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்ததாக கூறப்பட்ட நிலையில், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இந்த மழையானது அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மழை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web