பாஜக-அதிமுக கூட்டணியில் சேர அழைப்பு விடுகின்றனர்... சீமான் பளிச்!
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல்கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியல் வியூகங்களை வகுத்து திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தேர்தல் வரவுள்ளதால் நீட் தேர்வு மாணவர்களுக்கு அஞ்சலி எனும் பாட்டு, கூத்துகளை அதிமுகவினர் நடத்துகின்றனர்.

அவர்கள் நடத்திய அஞ்சலிக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பெ.மணியரசன் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்தரங்கம் நிகழ்சியில் நாம் தமிழர் மாநில ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டார். அங்கு செய்தியாளர் சந்திப்பில் சீமான், “நீட் தேர்வில் உயிரிழந்த மாணவர்களுக்கு அதிமுக கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அவர்கள் அஞ்சலி செலுத்தியதற்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். தேர்தல் நேரத்தில் பாட்டு, கூத்து, தெருக்கூத்து போல பல நடக்கும், அதையெல்லாம் பார்த்துவிட்டு போகவேண்டியது தான்.

பாஜக-அதிமுக கூட்டணியில் சேர அழைப்பு விடுகின்றனர். கூட்டணி ஆட்சியோ, கூட்டாட்சியோ நான் கேட்பது அல்லது. நான் கேட்பது நல்லாட்சி, என்னோட தொலைபேசி அழைப்புகளை 20 வருசமாக ஒட்டு கேட்கிறார்கள். நாட்டில் ஒரு ஒரு பிரச்சினைக்கும் நீதி மன்றத்தை நாடவேண்டியுள்ளது, நீதிமன்றம் உத்திரவிட்ட பின்னர் அதனை அமுல் படுத்துகிறார்கள், நாடாளுமன்றத்தில் தீர்வே கிடைக்கவில்லை” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
