“வேலையை விட்டு நிறுத்திட்டாங்க... சம்பள பாக்கியும் தரலை... அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் பரபரப்பு வாக்குமூலம்!

 
சுமதி

சென்னையில் திடீரென வேலையை விட்டு நிறுத்தியதால் மன உளைச்சலில் இருந்து வந்த பெண் ஊழியர், தனது சம்பள பாக்கியையும் தராமல் இழுத்தடித்ததால் மன உளைச்சலில் அதே அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுமதி(38). இவரது கணவர் பால்ராஜ். கருத்து வேறுபாடு காரணமாக இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே மனைவி சுமதியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு  ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சுமதி கூலி வேலைக்கு சென்று இரு குழந்தைகளையும் காப்பாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார். மகன் மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் படித்து வருகிறார். 

இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள (அவுட்சோர்சிங் முறையில்) தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 10 மாதங்களாக ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார் சுமதி. ஹவுஸ் கீப்பிங் பணிக்கு ஆண் பணியாளர்கள் தான் தேவைப்படுகிறார்கள். எனவே நேற்று 7ம் தேதியுடன் வேலையை விட்டு நின்று விடுங்கள். உங்கள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கூறி சுமதியை வேலையை விட்டு நிறுத்தியதாக தெரிய வருகிறது. இந்நிலையில் அலுவலகத்துக்கு சென்ற சுமதி  தனது சம்பளத்தை உடனே தருமாறு கேட்டதாக தெரிகிறது. 

தீக்குளிப்பு

அவர்கள் நேற்று மார்ச் 7ம் தேதி வெள்ளிக்கிழமை வரச்சொன்னதாக தெரிகிறது. அந்த நிறுவனத்தை விட்டு வெளியே சென்ற சுமதி சிறிது நேரம் கழித்து மீண்டும் அலுவலகத்துக்குள் சென்றுள்ளார். கேனில் தான் கொண்டு சென்ற பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு அலறி துடித்தார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

தீக்குளிப்பு

62% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் எழும்பூர் நீதிமன்ற 14வது நீதிபதி தயாளன், சுமதியிடம் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார்.

இந்த தீக்குளிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிறுவனத்தில் பணியாற்றும் HR ( மனிதவள மேலாளர்), சுமதி வேலை செய்வதை அடிக்கடி குறை கூறியபடியே இருந்துள்ளனர். அவர் கூறியதன் பேரிலேயே சுமதியை நீக்கிவிட்டு, ஆண் பணியாளரை ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு நியமிக்க நிறுவனத்தினர் முடிவு செய்தனர். இதனால் மன வேதனை அடைந்த சுமதி விபரீத முடிவு எடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அந்த நிறுவனத்தின் பெண் மனித வள அதிகாரியிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web