"தேர்தலுக்கான லஞ்சம்" - ரூ.5,000 வாங்கிக்கிட்டு வாயில் மண்ணைப் போடுவார்கள்” - ஸ்டாலினை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்!

 
3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதல்வர்  தற்போது எதற்கு சென்றுள்ளார்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்! 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவை அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி. உதயகுமார் "தேர்தல் நாடகம்" என்று வர்ணித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் உள்ள அரசியல் உள்நோக்கங்களை அடுக்கினார்: கடந்த 4 ஆண்டுகளாக வழங்காத தொகையை, தேர்தல் நெருங்கும் வேளையில் முன்கூட்டியே வழங்குவது என்பது வாக்காளர்களை விலைக்கு வாங்கும் முயற்சி என அவர் சாடினார்.

தமிழகம் ஏற்கனவே கடும் கடன் சுமையில் இருக்கும்போது, தேர்தல் ஆதாயத்திற்காக இப்படி முன்கூட்டியே நிதி ஒதுக்குவது மாநிலப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். "தமிழக வெற்றிக் கழகம்" போன்ற புதிய கட்சிகளின் வருகையும், அதிமுகவின் எழுச்சியும் திமுகவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த பயத்தின் வெளிப்பாடே இந்த ரூ.5,000 அறிவிப்பு என்றார்.

ஆர்பி உதயகுமார்

முதல்வர் ஸ்டாலின் 'கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பு' எனக் கூறி ரூ.2,000 கூடுதலாக வழங்கியுள்ளதை விமர்சித்த அவர், "திடீரென இப்போது மட்டும் பெண்களுக்குக் கோடைக்காலம் நினைவுக்கு வருகிறதா? கடந்த ஆண்டுகளில் ஏன் இந்தச் சிறப்புத் தொகுப்பு வழங்கப்படவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். இது முழுக்க முழுக்க தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன் மக்களின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்த எடுக்கப்பட்ட தந்திரம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஆர்பி உதயகுமார்

அதிமுக தரப்பில் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மற்றும் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பொதுப் பணத்தைத் தேர்தல் பரப்புரைக்காகச் செலவிடுவதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு ஆலோசித்து வருகிறது.

ஏற்கனவே திமுக அரசு தனது "திராவிட மாடல்" சாதனையாக இந்தத் திட்டத்தைக் கொண்டாடி வரும் நிலையில், அதிமுகவின் இந்த நேரடித் தாக்குதல் தேர்தல் களத்தில் அனலைப் பறக்க விட்டுள்ளது. "பெண்களுக்குத் தொகை செல்வதை அதிமுக தடுக்கப் பார்க்கிறது" எனத் திமுக அமைச்சர்களும் இதற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!