திக்..திக்.. வீடியோ!! நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்!! அலறித் துடிக்கும் பயணிகள்!!

 
தீப்பிடித்த விமானம்

விமானப் பயணங்களில் சமீபமாக பெரும் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.  பயணிகளை விட்டு விட்டு சென்று விட்ட விமானம், வெறும் உடைமைகளை மட்டும் ஏற்றி சென்ற விமானம், பயணிகளுடன் தகராறு, சிறுநீர் கழித்த விவகாரம் என தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. 

தீப்பிடித்த விமானம்
ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் ரக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தின் எஞ்சின் தீப்பற்றி எரிய தொடங்கியது. விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். பயத்தில் அலறி துடித்தனர். இதை கண்ட விமானி உடனே அவசர அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த  பாதுகாப்பு குழு பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். 



இந்த விமானம் ஸ்காட்லாந்து விமான நிலையத்திலிருந்து புறப்படும் போதே என்ஜினில் சத்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக விமானங்கள் புறப்படும் போது ஏற்படக்கூடிய சத்தம் தான் என விமானி நினைத்து விட்டார்.  டேக் ஆப் ஆகி நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது தான்  விமானத்தின் எஞ்சின் பகுதியில் தீ விபத்து என கண்டறியப்பட்டது. இச்சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து  இந்த விமானத்தில் பயணம் செய்த பிபிசி பத்திரிகையாளர் , "விமானம் புறப்பட்டபோது பலத்த சத்தம் கேட்டது. இருப்பினும் இது விமானங்கள் புறப்படும் போது ஏற்படும் சத்தம் என்றுதான் நினைத்திருந்தோம்.


விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானி மற்றும் பணிப்பெண்கள் பதட்டமாகி விட்டனர். பிறகுதான் விமானத்தில் தீப்பிடித்ததையும், அவசரமாக தரையிறக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். விமானம் தரையிறக்கப்பட்டதும்  தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு வீரர்கள்  விமானத்தை நோக்கி ஓடி வந்து தீயை அணைத்தனர். உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு உடனே விமானத்தில் இருந்து வெளியே செல்லவேண்டும் என அறிவுறுத்தினர். பயணிகள் குழப்பத்துடன் தங்களது உடைமைகளை விட்டு வெளியே வந்து விட்டோம்" . இதனை  விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web