தமிழகத்தில் மோடி வித்தை எடுபடாமல் இருக்க காரணம் இந்தி எதிர்ப்பு தான் காரணம்... திருமாவளவன் ஆவேசம்!

தமிழகத்தில் நேற்று பிப்ரவரி 18ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது குறித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தாய்மொழிக் கல்வியை தடுக்காதே என ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய அரசுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “PMShri பள்ளிகள் தமிழ்நாட்டிற்கு வந்தால், மாணவர்கள் 3 மொழிகள் கற்க வேண்டும். இதன் மூலம், இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு இந்தித் திணிப்பு நடைபெறும். மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்தார். அதற்கான அறப்போராட்டம்தான் இது. இந்தி இந்தியாவின் மொழியாம்.. தமிழ் பிராந்திய மொழியாம்.
இது எவ்வளவு பெரிய அபத்தம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து ஆணவமிக்கது. அடாவடித்தனமும் ஆணவமும் அனைவருக்குமான ஒரு பொறுப்புள்ள அமைச்சருக்கு இருக்கக் கூடாது. மோடியும், அமித்ஷாவும் ஆர்.எஸ்.எஸ். பிராமணர்களின் வேலையாட்கள். மோடி வித்தை எடுபடாமல் இருக்க காரணம் இந்தி எதிர்ப்பு தான் காரணம். திராவிட இயக்கங்கள் இருக்கும் வரை பாஜக வித்தை எடுபடாது. பாஜக வாலை ஒட்ட நறுக்குவோம். ஒன்றிய அரசு Blackmail செய்கிறார்கள். நிதியை தர வைப்போம். அந்த அளவுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என பேசியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!