பாஜகவை எதிர்க்க பயமா? விஜய்யை சாடும் திருமாவளவன் !

 
திருமா

விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நீங்கள் இன்னும் தேர்தலுக்கே வரவில்லை, அதற்குள் இவ்வளவு பயந்தால் எப்படி அரசியல் செய்வீர்கள் என கேள்வி எழுப்பினார். பாஜகவையோ மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க விஜய் தயாராக இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும் என்றால் அதற்குப் பொருள் பாஜக ஆட்சிதான் என திருமாவளவன் கூறினார். அதிமுக பலவீனமடைந்ததால்தான் இப்போது அந்த பெயர் பயன்படுத்தப்படுகிறது என்றும் விமர்சித்தார். விஜய் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அவரது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்றும் எச்சரித்தார்.

‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் விவகாரத்தில் பாஜகவின் அழுத்தம் உள்ளதா என்பதை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். பாஜக நெருக்கடியால் தான் அவர் தயங்குவதாக குற்றம்சாட்டினார். பாஜக, மோடி அரசை வெளிப்படையாக எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார் என்பதே தெளிவாக தெரிகிறது என்றும் திருமாவளவன் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!