திருப்பரங்குன்றம் மலை தீபம் வழக்கு… நாளை தீர்ப்பு!

 
திரப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை மதுரைக்கிளை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

திருப்பரங்குன்றம் மலை

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இந்த மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல் சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரி தர்கா தரப்பு முறையீடு செய்திருந்தது. இதையடுத்து வழக்கு மீண்டும் முக்கியத்துவம் பெற்றது.

திருப்பரங்குன்றம்

தர்கா தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிட்டபோது, திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பு, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!