திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி... உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனால், பாரம்பரியப்படி மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடரும் என்று தெளிவாகியுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, கோயில் நிர்வாகம் மற்றும் போலீசார் மேல்முறையீடு செய்தனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், தீபத்தூண் தர்காவுக்கு சொந்தமானது என்ற வாதங்களை அரசு தரப்பு முன்வைத்தது. ஆனால், தீபத்தூண் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாகவும், பொதுஅமைதி பாதிக்கப்படும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், அனைத்து இந்துக்களும் தரிசிக்கவே உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது என்றும் நீதிமன்றம் கூறியது. மத்திய தொல்லியல் துறை அனுமதியுடன் கோயில் நிர்வாகமே தீபம் ஏற்ற வேண்டும் என்றும், தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு திருப்பரங்குன்றம் கோயிலின் பாரம்பரிய உரிமையை உறுதிப்படுத்தியதாக கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
