நாளை திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா தொடக்கம்!
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நாளை காலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா வரும் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. 27-ந் தேதி காலை 7.50 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து நகரின் முக்கிய ரதவீதிகளில் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

சிகர நிகழ்ச்சியாக 28-ந் தேதி காலை 9.40 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் முருகப்பெருமான் தெய்வானையுடன் தெப்பமிதவையில் அமர்ந்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வருகிறார். அதே நாளில் இரவு 7 மணியளவில் மின்னொளியில் மீண்டும் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தங்க குதிரையில் முருகப்பெருமான் வீதி உலா வந்து சன்னதி தெருவில் சூரசம்ஹார லீலை நடைபெறுகிறது.

திருவிழாவின் 10 நாட்களிலும் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான், தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவையொட்டி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தை சுற்றி தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் நீர் எடுத்து தெப்பக்குளம் நிரப்பப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
