திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்… தீபம் ஏற்ற மறுப்பு சர்ச்சை

 
திருப்பரங்குன்றம்
 

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் வரும் 6-ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, நேற்று சந்தனக்கூடு திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. மரத்திலான கொடியுடன் ஊர்வலம் நடந்த பிறகு, மலையில் உள்ள தர்காவில் கொடி ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம்

இதற்கிடையே, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை. மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு மறுத்தது. இதனால் தீபம் ஏற்றப்படாமல் போனது.

திருப்பரங்குன்றம்

இந்த விவகாரத்தில் தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்து, தற்போது தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் சந்தனக்கூடு திருவிழாவுக்கு அனுமதி, மறுபுறம் தீபம் ஏற்ற மறுப்பு என திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!