திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் அனுமதி... !

 
திருப்பரங்குன்றம்
 

திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில்,  ஜனவரி 6-ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி இரவு, பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து மின்னொளி அலங்கார வண்டியில் பிறை கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தக் கொடி மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தர்காவில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 19 நாட்களாக பொதுமக்களுக்கு மலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. சந்தனக்கூடு விழாவிற்காக மட்டும் இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து தரப்பினருக்கும் மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று நிம்மதி நிலவுகிறது.

திருப்பரங்குன்றம்

இது குறித்து காவல் உதவி ஆணையர் சசிபிரியா தெரிவிக்கையில், மலைக்குச் செல்லும் பொதுமக்கள் ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணை வழங்க வேண்டும் என கூறினார். சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!