மார்ச் 3ம் தேதி 10.30 மணி நேரம் மூடப்படும் திருப்பதி கோயில்!
சந்திர கிரகணம் காரணமாக வரும் மார்ச் 3-ஆம் தேதி திருமலை ஏழுமலையான் கோயில் 10.30 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் கதவுகள் அடைக்கப்படும். வைகானச ஆகம விதிப்படி, கிரகணத்துக்கு 6 மணி நேரம் முன்பே கோயில் மூடப்படுவது வழக்கம்.

மார்ச் 3-ஆம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி, மாலை 6.47 மணிக்கு முடிவடைகிறது. கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோயில் திறக்கப்படும். அதன்பின் சுத்தி, புண்யாஹவசனங்கள் நடைபெறும். இரவு 8.30 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் மீண்டும் வழங்கப்படும்.

சந்திர கிரகணத்தையொட்டி அஷ்டதள பாத பத்மராதன சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபாலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
