நாளை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்துதல்...!
நாளை 3ம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. ஆகம விதிகளின்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான் கோயில் சாத்தப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தற்காலிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கிரகணம் முழுமையாக நிறைவடைந்த பின் 3ம் தேதி இரவு 7.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். பின்னர் கோயில் முழுவதும் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன் பிறகு இரவு 8.30 மணி முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இதனை முன்னிட்டு நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களுக்கு சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. கிரகணம் காரணமாக பக்தர்கள் முன்னெச்சரிக்கையுடன் பயணம் திட்டமிடுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
