திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... இன்று மீண்டும் விசாரணை!

 
திருப்பரங்குன்றம்
 

மதுரை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு டிசம்பர் 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலர் காணொலி காட்சி மூலம் ஆஜரானார். நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம்

இதற்கு பதிலளித்த தலைமை செயலர், சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக மேல்முறையீடு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் உள்ளதாக தெரிவித்தார். ஆனால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதி கடுமையாக கூறினார். திண்டுக்கல், கன்னியாகுமரி தொடர்பான வழக்குகளிலும் உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

திருப்பரங்குன்றம்

இந்த விவகாரத்தில் பதிலளிக்க நான்கு வார அவகாசம் கோரிய தலைமை செயலரிடம், உரிய விளக்கம் அளித்தே ஆக வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார். நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன் என்ற கேள்வியுடன், வழக்கை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!