தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 13!
மார்கழி 13 : தினம் ஒரு திருப்பாவை ; பாசுரம் 13
கண்ணன் நினைவே நன்னாள்
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம் ;
பறவை வடிவில் வந்த பகாசுரனை வதைத்து, பிறன் மனை நாடிய ராவணனைச் சாய்த்த நாராயணனின் பெருமையைப் பாடியபடியே தோழியர் அனைவரும் பாவை விரதம் இருக்கும் இடத்தை அடைந்துவிட்டனர். கீழ்வானில் வெள்ளி முளைத்தது. வியாழன் மறைந்தது. விடியலை அறிவிக்கும் பறவைகளின் கீச்சொலி எங்கும் ஒலிக்கிறது.தாமரை மலர் போன்ற கண்களையுடைய தோழியே, இத்தனை அறிகுறிகள் தென்பட்டும் இன்னும் தூக்கத்தில் மூழ்கி இருப்பது ஏன்? உடல் நடுங்கும் குளிர்ந்த நீரிலும் நீச்சலடித்து நீராட வேண்டிய நேரம் இது.
மார்கழி விடியல் உன்னை அழைக்கிறது.கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே. மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பு. ஆகவே தூக்கம் எனும் திருட்டை விரட்டி, எங்களுடன் நீராட வா. பக்தியும் ஆனந்தமும் கலக்கும் இந்த புனித நேரத்தை தவற விடாதே.

தூக்கம் ஒரு திருட்டு என ஆண்டாள் சொல்கிறாள். பொருளை எடுத்தால் மட்டுமல்ல, நேரத்தை வீணடிப்பதும் திருட்டே. குறிப்பாக பகவானை நினைக்காமல் கழியும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் மோசடி. கள்ளத்தை விட்டுவிட்டு விழித்தெழு என்பதே அவளின் அழைப்பு.வயதான பிறகு திருப்பாவை படிக்கலாம் என்று தள்ளிப் போடக் கூடாது. அப்போது வாய் உளறும், கைகள் நடுங்கும், கண்கள் மங்கும். பாடலும் முழுமையாக வராது. அந்த நேரத்தில் நினைத்தாலும் மனம் நிறையாது.
இளமையிலேயே பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். அவனது கதைகளை மனதில் பதிய வேண்டும். அப்படி செய்தால் வாழ்வில் செல்வமும் நிம்மதியும் தானாக வந்து சேரும். காலத்தை களவாடாமல், கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளையும் நன்னாளாக்கு.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
