தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 16

 
திருப்பாவை

மார்கழி 16... தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 16

மணிக்கதவை திறப்பாய் கோவில் காவலனே... 

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

திருப்பாவை

பொருள் விளக்கம்

நந்தகோபனின் திருமாளிகையை காக்கும் காவலனை நோக்கி, ஆயர்குல சிறுமியர் குரல் எழுப்பினர். கொடித் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வாசலில் நின்று, கதவைத் திறக்குமாறு பணிவுடன் வேண்டினர். நீராடி வந்த பின்பு, தங்கள் விரதத்தின் நோக்கத்தை நினைவூட்டினர்.கரிய நிற கண்ணன் நேற்றே பறை தருவதாக சொன்னதாக அவர்கள் கூறினர். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களைப் பாட வந்திருப்பதாகத் தெரிவித்தனர். மாயச் செயல்கள் புரியும் கண்ணனைப் பார்க்கும் ஆவல் அவர்களின் குரலில் ஒலித்தது.“முடியாது” என்ற சொல்லை முன்கூட்டியே சொல்லாதே என காவலனிடம் கேட்டனர். மூடியுள்ள நிலைக்கதவைத் திறந்து அருள் புரிய வேண்டினர். மார்கழி காலை, நந்தகோபன் மாளிகை வாசலில் பக்தியின் நாதம் முழங்கியது.

திருப்பாவை

 

இந்த பாடல் உண்மையில் சொற்களின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. ஒரு செயலைச் செய்யப் போகும் ஒருவர் முன், அவருக்கு எதிரான வார்த்தைகள் (அபசகுனமான கருத்துகள், ‘இதைக் கூட செய்யாதே’ போன்ற இடைஞ்சல்கள்) சொல்லப்படுவது அவரின் மனதை பதட்டப்படுத்தி, செயலின் பயனைக் குறைக்கலாம்.
அதற்குப் பதிலாக, அவரின் செயல் என்ன என்பதை முதலில் முழுமையாக புரிந்து கொண்டு, அதை எப்படிப் படிப்படியாகச் செய்யலாம், அல்லது எந்த வழியில் சிறப்பாக நடக்கலாம் என்பதைக் கவனமாக, அமைதியாக அறிவுரை வழங்குவது சிறந்தது என்பது இதில் முக்கியக் கருத்து. 

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!