தினம் ஒரு திருப்பாவை .... பாசுரம் 22!

 
திருப்பாவை

மார்கழி 22... தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 22

கடைக்கண் பார்வை கிடைக்க எளிய வழி :

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

திருப்பாவை

பொருள் விளக்கம் :

கண்ணா, தங்களைப் பற்றி பெருமை கொண்ட அரசர்களும், இந்த உலகத்தை ஆண்ட பெரியோர்களும் கூட இன்று மிகுந்த பணிவுடன் உன் அருகே நிற்கிறார்கள். உன் பள்ளிக்கட்டிலின் சுற்றிலும், சத்சங்கத்திற்கு வந்த பக்தர்கள் போல அமைதியாக காத்திருக்கிறார்கள். அவர்களைப் போல நாங்களும் உன் அருகில் வந்து நிற்கிறோம்.

சிறுமணிகள் ஒலிப்பது போல மென்மையாகவும், தாமரை மலர் மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சற்றுச் சற்றாகத் திறந்து விழிக்கமாட்டாயா. நீ கண் திறக்கும் அந்த நொடி எங்களுக்கு பேரானந்தமாக இருக்கும்.

சந்திரனும் சூரியனும் உதித்தது போல உன் கண்கள் எங்களை நோக்கிப் பார்த்தால் போதும். எங்கள் மீது இருக்கும் எல்லா பாவங்களும், துன்பங்களும் அப்போதே நீங்கி விடும். உன் ஒரு கருணை பார்வையே எங்களுக்கு போதுமானது.

திருப்பாவை

இறைவனின் ஒரு கடைக்கண் பார்வை பட்டால் போதும். எல்லா சாபங்களும் கருகிப் போய்விடும். அந்த பார்வை நம் மீது எப்படி விழும் என்று பலர் யோசிக்கிறார்கள். அதற்கான வழியையும் பக்தர்களுக்கு ஆண்டாள் மிக எளிமையாகச் சொல்லிவிட்டாள்.மார்கழி மாதத்தில் மட்டுமல்ல, எந்த நாளிலும் திருப்பாவை பாடல்களை பக்தியுடன் படித்தாலே போதும். நீண்ட நேரம் வேண்டாம். மனம் கலந்து சொன்னால் அது போதுமான பிரார்த்தனையாக மாறும். அந்தச் சொல்லில் இறைவன் மனம் உருகுவான்.

அவ்வளவு நேரமும் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய நாமங்களை சொன்னாலே போதும் என்று ஆண்டாள் கூறியிருக்கிறாள். அந்த ஒரு சொல்லே இறைவனின் பார்வையை நம் மீது திருப்பும். அந்த பார்வையே வாழ்க்கையை மாற்றி விடும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!