தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 25!
மார்கழி 25.... தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 25!
சேவகனாய் வந்த கண்ணன்...
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம் :
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவன் கண்ணன். பிறந்த உடனே யசோதையின் இல்லத்திற்கு மறைந்து சென்றவன். அங்கே ஒளிந்து வளர்ந்தான். இந்த உண்மை கம்சனை நடுங்க வைத்தது.உன்னை அழிக்க வேண்டும் என்ற பயம் கம்சனின் மனதை எரித்தது. ஆனால் அவன் எண்ணமே அழிந்தது. உயர்ந்த குணங்களுடன் திருமால் அனைவரையும் காத்தான். அந்த அருளையே நாடி இப்போது நாங்கள் வந்துள்ளோம்.உன் அருள் கிடைத்தால் உன் பெருமையைப் பாடுவோம். பக்தர்களுக்காக நீ செய்த நல்வினைகளைச் சொல்லிப் போற்றுவோம். உன்னைப் பாடுவதால் துன்பங்கள் விலகும். வாழ்க்கை இன்பமாக மலரும்.

பக்தன் முழு மனதுடன் இறைவனை நினைத்தால், இறைவன் அவனுக்குச் சேவகனாக மாறுவான். பிரகலாதனுக்கும் அவன் தந்தை இரணியனுக்கும் வாதம் நடந்தது. உன் நாராயணன் எங்கே இருக்கிறான் என இரணியன் கேட்டான். அந்தக் கேள்வியே இறைவனை பதற வைத்தது.உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு அணுவிலும் இறைவன் நிறைந்திருந்தான். பிரகலாதன் சொல்வதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயம் அவனுக்குள் இருந்தது. தூண் என்றதும், அதற்குள்ளிருந்து நரசிம்மராக வெளிப்பட்டார். பக்தனை காப்பாற்ற அவர் எடுத்த வேகமே இதற்குச் சாட்சி.பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணமும் அவரிடமே உள்ளது. பக்தியின் சக்தியை உணர்த்தும் சம்பவங்கள் இவை. இவற்றை படித்து மனதில் பதித்தாலே, அவனை அடையும் வழி நமக்கும் திறந்து விடும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
