தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 3...!

 
திருப்பாவை

திருப்பாவை ... பாசுரம் 3... ஆண்டாளின் வாமன அவதாரம்!

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை

பொருள்  விளக்கம்... 

திருப்பாவை பற்றிய முக்கியமான விளக்கம் இது. ஆண்டாள் இந்தத் திருப்பாவையில் வாமன அவதாரம் குறித்துப் பாடியுள்ளார். "சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் வந்தான். அவன் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தனக்குச் சொந்தமாக்கிக் கொண்ட உத்தமன்" என்று பாடுகிறார்.

அவனது சிறப்பைப் பாடி, பாவைக்கு மலர்கள் சாத்தி நீராடச் செல்வோம் என்று ஆண்டாள் அழைக்கிறாள். இந்த விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறுகிறாள். உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும்.

திருப்பாவை

மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத் தரும். இந்த விரதம் என்றும் வற்றாத செல்வத்தைத் தரும் என்று ஆண்டாள் அருள்கிறாள். இந்தப் பாடல் திருக்கோவிலூரில் (விழுப்புரம் மாவட்டம்) உள்ள உலகளந்த பெருமாளைக் குறித்துப் பாடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!