தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 9!
மார்கழி 9... தினம் ஒரு திருப்பாவை ... பாசுரம் 9 :
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்
உறக்கத்தை கலைக்கும் நாராயண நாமம்
பிரகாசமான நவரத்தின மாளிகையில் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய். சுற்றிலும் விளக்குகள் எரிகின்றன. நறுமண திரவியத்தின் வாசனை பரவுகிறது. மென்மையான பஞ்சு மெத்தையில் நிம்மதியான உறக்கம். மாமன் மகளே, உன் வீட்டு மணிக்கதவைத் திற. எங்கள் அன்பு மாமியே, உன் மகளை எழுப்பிவிடு. எவ்வளவு நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம். அவள் பதிலே இல்லை.

அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை கட்டிப் போட்டதா? இல்லை ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? இனியும் தாமதம் வேண்டாம். உடனே எழுந்து வா. எங்களுடன் சேர்ந்து விளையாடும் அந்த நாராயணனை நினை. மாயங்கள் செய்பவன் அவன். தவத்துக்கு உரியவன் அவன். வைகுண்டத்தின் அதிபதியும் அவனே.
உலகம் மாடமாளிகை வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கிறது. சொகுசு சோம்பலை வளர்க்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டிய நேரம் இது. நிலையானது வைகுண்டமே என்பதை உணர வேண்டும். அதை அடைய நாராயணனின் திருநாமங்கள் போதும். அந்த நாமத்தைச் சொல். உறக்கம் விலகும். மனம் தெளியும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
