தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 4!
திருப்பாவை பாடல் 4 :கண்ணனின் நிறத்தில் மழை
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்
மேகங்களுக்கு அதிபதியான மழை தெய்வமே, எங்கள் கோரிக்கையைக் கேள்! உன்னிடம் இருக்கும் தண்ணீரைச் சிறிதும் வைத்துக் கொள்ளாதே. கடலில் உள்ள நீரை முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே செல். உலகை ஆளும் முதல்வன் கண்ணன். அவனது நிறம் போல நீ இருண்டு வா. வலிமையான தோள்களைக் கொண்டவன் பத்மநாபன். அவன் கையில் இருக்கும் சக்கரத்தைப் போல மின்னலை வீசு.
வலம்புரிச் சங்கு ஊதுவது போல இடி சத்தம் எழுப்பு. வெற்றியை மட்டுமே ஈட்டும் சார்ங்கம் வில் உள்ளது. அதில் இருந்து புறப்படும் அம்புகள் போல மழையைப் பொழிவாயாக. அந்த மழையால் நாங்கள் இந்த உலகில் மகிழ்வுடன் வாழ வேண்டும். எங்கள் மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்.

இந்தக் கோரிக்கையை ஆயர் குலச் சிறுமிகள் வைத்தார்கள். அவர்களுக்கு மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் யார் என்று தெரியாது. ஏனெனில், அவர்களிடம் போதிய கல்வியறிவு இல்லை. அதனால் பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா" என்று அழைத்தார்கள். அவர்கள் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைப்பது போலக் "கண்ணா" என்று அழைத்தனர். அந்தக் கண்ணனும் வந்தான். அவனிடம் தங்கள் வேண்டுதலைச் சிறுமிகள் வைத்தார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
