லேசர் ஒளியில் ஜொலிக்கும் திருவள்ளுவர் சிலை... நியூ இயர் கொண்டாட குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடுக்கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவை லேசர் ஒளி விளக்குகளால் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகின்றன.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000ம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு புகழ்களை பாடும் இச்சிலை ஆனது அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில் இச்சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா நேற்றும், இன்றும் கொண்டாடப்படுகிறது.
நடுக்கடலில் உள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபமும் மற்றும் 133 அடி உயரமுள்ள கொண்ட திருவள்ளுவரின் சிலையும் இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டு பாலமும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி முழுவதும் களைகட்டியுள்ளன.
கடல் நடுவே திருவள்ளுவரின் சிலை இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் லேசர் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் லேசர் ஒளி வெள்ளத்தில் திருவள்ளுவர் சிலை இரவில் வண்ணமயமாக ஜொலிக்கின்றன.
கன்னியாகுமரி சுற்றுவட்டாரம் முழுவதும் மின்னொளிகளால் வெள்ளி விழாவை நினைவு கூறும் வகையில், வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் போன்றவை வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகவும், புதுவருட சூரியோதயத்தைக் காணவும் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!