பிரான்சில் திருவள்ளுவர் சிலை!! மோடி அதிரடி!!

 
திருவள்ளுவர் சிலை


இந்தியப் பிரதமர் மோடி  2நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்தியா - பிரான்ஸ்   நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதில் ரஃபேல் எம் ரக கடற்படை போர் விமானம் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள்  குறித்த ஒப்பந்தம் இடம்பெறும் எனக் கூறுகின்றனர்.  பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட்டது.

திருவள்ளுவர் சிலை

 பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியின் வண்ணத்தை வெளியிடும் வகையில் வானத்தில் விமானங்கள் வட்டமிட்டன. இதில் இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.  பிரான்ஸ் மற்றும் இந்தியா ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபட்டது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.இந்நிலையில்  பாரிஸில் உள்ள லா செய்னே முசிகலே  இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் சிலை

 தமிழ் புலவர் திருவள்ளுவருக்கு இந்திய வரலாற்று   சிறப்பை பிரான்ஸ் மக்களும் கொண்டாடும் வகையில் திருவள்ளுவர் சிலை பிரபலம் அடையும். இது பிரான்ஸ் நாட்டின் செர்கே பிரிஃபெக்சர் பகுதியில் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைக்கப்படுவதற்கான முன்னெடுப்பை அந்நாட்டில் உள்ள தமிழ் கலாச்சார சங்கம் முன்னெடுத்துள்ளது .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web