திருவனந்தபுரம்–தாம்பரம் அம்ரித் பாரத் ரயில்… நாளை பிரதமர் தொடங்கி வைப்பு!

 
rail

தென்னக ரெயில்வேயில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு புதிய வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி காலை 10.45 மணியளவில் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். மாலை 3.45 மணிக்கு மதுரை வந்து சேரும் ரெயில், நள்ளிரவு 12.30 மணிக்கு தாம்பரம் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயிலில் 11 பொதுப்பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக நியூஜல்பைகுரி வரை அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. புதிய ரெயில் தொடக்கம் தென் மாவட்ட பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!