திருவண்ணாமலை தீபத்துக்கு சிறப்பு ரயில்கள்!

 
திருவண்ணாமலை
 

ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் விரைந்து வரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. அண்ணாமலை தீபத்தைக் காண நினைக்கும் பக்தரின் உணர்வோடு நகரம் முழுவதும் திருவிழா சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில், பெரும் திரளான பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை, தாம்பரம், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் சர்க்குலர் ரயில், அரக்கோணம் – காட்பாடி – திருவண்ணாமலை – விழுப்புரம் – தாம்பரம் – எழும்பூர் வழியாக சென்று இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். விழுப்புரத்தில் இருந்து நவம்பர் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில், 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல் திருவண்ணாமலையிலிருந்து இத்தேதிகளிலேயே பகல் 12.40 மணிக்கு புறப்படும் ரயில் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரத்திலிருந்து டிசம்பர் 3 முதல் 5 வரை இரவு 10.40 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் 1.45 மணிக்கு வேலூர் கன்டோன்மெண்ட் வந்தடையும். அங்கிருந்து டிசம்பர் 4–6 வரை அதிகாலை 2.25 மணிக்கு புறப்படும் ரயில் காலை 5 மணிக்கு விழுப்புரம் சேரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை

சென்னை தாம்பரத்திலிருந்து டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 1.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல் திருவண்ணாமலையிலிருந்து டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 9 மணிக்கு தாம்பரம் சேரும். தென் மாவட்டத்திலான திருநெல்வேலியிலிருந்தும் டிசம்பர் 3ஆம் தேதி இரவு 9.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30-க்கு திருவண்ணாமலையை அடையும். அங்கிருந்து டிசம்பர் 4 இரவு 7.55-க்கு புறப்பட்டு மறுநாள் 8.30 மணிக்கு திருநெல்வேலி திரும்பும். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த காலகட்டத்தில், பயணிகள் நெரிசல் குறைவாக்கும் வகையில் இந்த ரயில் ஏற்பாடுகள் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!