டிசம்பர் 2 , 3, 4 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் ... முன்பதிவு தொடக்கம்!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக டிசம்பர் 2, 3, 4 தேதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது. நாகர்கோவில், மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தொலை தூர ஊர்களிலிருந்து நேரடி அதிநவீன பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக குளிர்சாதனமும் படுக்கை வசதியோடும் பேருந்துகள் விடுமுறை நாட்களில் இயக்கப்படும் எனத் தகவல்.

சென்னையிலிருந்து மட்டும் 160 பேருந்துகள் இயக்கம் — டிசம்பர் 3 & 4 இரு நாளும் பக்தர்கள் அதிகம் வரும் என கருதி AC / Non-AC பேருந்துகள் தொடர்ச்சியாக புறப்படும். பயணிக்க விரும்புவோர் முன்பதிவு செய்தால் நெரிசலைத் தவிர்க்கலாம் என்று போக்குவரத்து அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், வார இறுதி & முகூர்த்த நாட்கள் காரணமாக நகரங்களிலிருந்து பல்வேறு திசைகளுக்கும் 400–500 வரை கூடுதல் பேருந்துகள் விடப்படும். டிக்கெட், நேர அட்டவணை, முன்பதிவு விவரங்களுக்கு மதுரை, திருநெல்வேலி, கோவை மற்றும் சென்னை பிரிவு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பால் திருவண்ணாமலை தீப தரிசனம் செல்ல திட்டமிட்டோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
