மங்கல வாழ்வு பெற மார்கழி திருவாதிரை விரதமுறை, பலன்கள்....!
இன்று மார்கழி திருவாதிரை. மார்கழி மாதம் பீடு உடைய அதாவது பெருமைகளை உடைய மாதம். ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரம் வரும் என்றாலும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் நடராஜரை தரிசனம் செய்ய மங்கலமான வாழ்வு கிட்டும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. இந்த நாளில் நடராஜ பெருமானின் தரிசனம் தான் ஆருத்ரா தரிசனம் என்பர்.

இந்த விரதத்தை இருக்கும் சுமங்கலி பெண்கள் தீர்க்க சுமங்கலியோகம் பெறுவர். தமிழகத்தை பொறுத்தவரை திருமணமான பெண்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக சோமவார விரதம், காரடையான் நோன்பு, வரலட்சுமி நோன்பு போன்ற விரதங்களையே இருப்பர். இந்த வரிசையில் மார்கழி பௌர்ணமியும், திருவாதிரை நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் விரதம் இருந்து நடராஜரை வழிபடுவதும் சிறப்பு . இதன் மூலம் கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளில் சுமங்கலி பெண்கள் தாலி சரடை மாற்றிக் கொள்ளலாம். இந்த நாளில் சூரிய உதயத்திற்கு முன்பாக அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் கணவர் கையினால் தாலிச்சரடை கட்டிக்கொண்டால் சிறப்பு
விரதம் இருக்கும் முறை:
இந்த நாளில் அதிகாலையில் வீடு சுத்தம் செய்து உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். வீட்டிற்கு வந்து முறைப்படி களி செய்து இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும்.மஞ்சளை கொண்டு பிள்ளையார் பிடித்து அருகம்புல், விபூதி,சந்தனம், குங்குமத்துடன் மாங்கல்ய சரடுகளையும் வைக்க வேண்டும். விரதம் இருக்காதவர்கள் வீட்டில் வடை, பாயாசம், சாதம், சாம்பார், களியுடன் 18 வகை காய் சேர்த்து சாம்பார் அல்லது கூட்டு செய்யலாம்.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலை வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்திற்கு படையல் இட்டு அதை கணவருக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். உணவு தானம் செய்வது கூடுதல் சிறப்பு. இந்த விரதம் இருப்பவர்கள் சிவ பார்வதியின் அருள்பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் பெறுவார்கள் என்பது ஐதீகம். சுமங்கலி பெண்கள் அனைவருமே திருவாதிரை நோன்பு இருக்கலாம். களி செய்து இறைவனுக்கு படைக்கலாம். நடராஜரை தரிசித்து தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறலாம்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!
