ஸ்ரீரங்கம் கொள்ளிடத்தில் திருவெள்ளறை பெருமாளுக்கு தீர்த்தவாரி! பெருந்திரளாக கூடிய பக்தர்கள்!

 
ஸ்ரீரங்கம்

திருவெள்ளறை பங்கஜவல்லி சமேத புண்டரீ காட்சப் பெருமாளுக்கு நேற்று ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்த வாரி நடைப் பெற்றது. பெருந்திரளான பக்தர்கள் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் பெருமாள் தாயாரை சேவித்தனர்.

ஸ்ரீரங்கம் தீர்த்தவாரி

திருவெள்ளறை பங்கஜவல்லி சமேத புண்டர் காட்சப்பெருமாள் கோயிலில் தேர் திருவிழா கடந்த 10ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று திருவெள்ளறை கோயில் உற்சவர் செந்தாமரைக் கண்ணன் பங்கஜவல்லி தாயாருடன் தீர்த்தவாரிக்கென ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுக்கு எழுந்தருளினார்.

அங்கு அவர்களுக்கு தீர்த்தவாரி மற்றும் சிறப்பு திருவாராதனங்கள் நடைப்பெற்றன. அடுத்து சிறப்பு அலங்காரத்துடன் இரவு வரை பக்தர்களுக்கு தாயார் பெருமாள் சேவை சாதித்தனர். நள்ளிரவுக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டு திருவெள்ளறை திரும்பினர்கள்.

ஸ்ரீரங்கம் தீர்த்தவாரி

திருவெள்ளறை பெருமாள் கோயில் தேர்த்திரு . விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாக அதிகாரியும், இணை ஆணையருமான மாரிமுத்து தலைமையில் திருவெள்ளறை கோயில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web