ஆளுநர் ரவிக்கு இது ஒரு மூக்குடைப்பு... திருமாவளவன் காட்டம்!

சென்னை சேப்பாக்கத்தில் வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தலைமுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து திருமாவளவன், “வக்பு திருத்த சட்டம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சிறுபான்மை சமூகங்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. பாஜக அரசின் இந்த போக்கு ஒரு பாசிச போக்கு. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகம் மசோதாக்கள் உள்ளிட்ட அனைத்தையும் கிடப்பில் போட்டு வைத்தார்.
தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி குடியரசு தலைவருக்கு அதனை அனுப்பி வைக்கிறோம் என்று கால தாமதம் செய்தார். இன்று உச்சநீதிமன்றம் அதனை கண்டித்து இருப்பதோடு இந்த சட்ட மசோதாக்களை ஏற்கிறோம், அதனை சட்டம் ஆக்குகிறோம் என்ற தீர்ப்பை அளித்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு புகட்டி இருக்கிற ஒரு பாடம் இது. சனாதன பின்புலத்தில் அரசியல் செய்யும் ஆளுநர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத பாடமாக அமையும். ஆர்எஸ்எஸ் சிந்தனைகளோடு செயல்படக்கூடிய அனைவருக்குமான ஒரு பாடம், ஆளுநர் ரவிக்கு இது ஒரு மூக்குடைப்பு.
ஆளுநர் அவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் தட்டிக் கழித்தார், ஒரு ஐபிஎஸ் அதிகாரி, ஆனால் அவர் ஜனநாயகத்தையும் சட்டத்தையும் மதிக்கவில்லை. தான் பெற்ற சனாதன அரசியல் பின்புலத்தை உயர்வாக கருதுகிறார். தமிழ்நாட்டின் இருக்கும் திமுக அரசுக்கு நெருக்கடி தருவதாக நினைத்து அவர் தான் தோன்றித்தனமாக செயல்பட்டார். அதற்கு உச்சநீதிமன்றம் பாடம் புகட்டி உள்ளது. ஒன்பதாம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டி இருக்கிறார். அதில் கலந்து பேசி நீட் தேர்வு விலக்கு குறித்தான சட்டத்திற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து முடிவெடுப்போம். வஃக்பு வாரி சட்டத்தை திரும்ப பெறுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!