தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்... இந்த நேரங்களைத் தவிர்த்திடுங்க!

 
பொங்கல்

தை மாதத்தின் முதல் நாளில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாகப் பொங்கல் வைக்கப்படுகிறது. தைப் பொங்கல் தினத்தில் பொங்கல் வைப்பதற்கான உகந்த நேரம் காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை. இந்த நேரம் சிறப்பான நேரமாக கருதப்படுகிறது. அதே போன்று காலையில் பொங்கல் வைக்காதவர்கள் அன்றைய தினம் மதியம் 1 மணி முதல் 1:30 மணி வரையில் வைக்கலாம்.

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4:30 மணி  முதல் 6 மணி வரையில் பொங்கல் பானை வைத்து, சூரிய உதயத்தின் போது பொங்கல் பொங்கி வருவது குடும்பத்திற்கு மிகுந்த சுபிட்சத்தைத் தரும்.

பொங்கல்

அதே சமயம் பொங்கல் வைப்பதற்கான தவிர்க்க வேண்டிய நேரங்கள்  ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை. எமகண்டம்: காலை 9 மணி முதல் 10:30 மணி வரை. (இந்த நேரங்களில் பொங்கல் வைப்பதைத் தவிர்க்கவும்).

2. மாட்டுப் பொங்கல் (ஜனவரி 15, 2026 - வியாழக்கிழமை): கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் இந்த நாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம்: காலை உகந்த நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

மதிய உகந்த நேரம்: மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை.

பொங்கல்

தவிர்க்க வேண்டிய நேரங்கள்:

ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை.

எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை.

பொங்கல் வைக்கும்போது கிழக்குத் திசை நோக்கி அமர்ந்து சூரிய பகவானை வணங்குவது மரபு. பொங்கல் பானைக்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு, இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்துகளைக் கட்டுவது மங்கலமாகக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!