இதற்காக தான் ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தேன்... பிரதமர் மோடி!

 
பிரதமர் மோடி

 

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரைநிகழ்த்தினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வது இதுவே முதல் முறை. 18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்துள்ளார். அந்த சமயத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி 2 நாள்களுக்கு முன்னதாக G7 மாநாட்டில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்தார். அப்போது, டிரம்ப் என்னை டெலிபோன் மூலம் ‘வாஷிங்டன் வழியாக வாருங்கள், இரவு உணவு சாப்பிடலாம், பேசலாம்’ என அழைப்பு விடுத்திருந்தார்.

மோடி ட்ரம்ப்

ஆனால், “ஜெகநாத்-ன் பூமிக்கு வரவேண்டும் என்பதற்காக அதிபர் ட்ரம்பின் அழைப்பை பணிவுடன் நிராகரித்து விட்டேன்” என கூறியுள்ளார். பிரதமர் மோடி சமீபத்தில் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றிருந்த போது பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்தார்.

டிரம்ப் மோடி

ஜி7 உச்சிமாநாட்டில் டிரம்ப், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் வாஷிங்டன் டிசிக்கு வரும்படி கேட்டார். தான் ஜெகந்நாதரின் பூமியான ஒடிசாவிற்கு நான் செல்ல வேண்டும் எனக் கூறி, அழைப்பிற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன். அவரது அழைப்பை நான் பணிவுடன் நிராகரித்தேன்,” என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது