இன்று காலை கேள்வி நேரம்... 5 நாட்கள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப் பேரவை கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை, 5 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று ஏப்ரல் 15ம் தேதி கூடுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரமும், அதனைத் தொடா்ந்து நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகளும் விவாதிக்கப்பட உள்ளன.
அதன்பின்னர், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளா்ச்சி, மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. அவற்றுக்கு அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனா்.
சட்டப்பேரவைக்கு நேற்று ஏப்ரல் 14ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், 5 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, பேரவை இன்று காலை மீண்டும் கூடவுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!