புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்று திறப்பு… நடைபயிற்சிக்கு புதிய கட்டணம் அறிவிப்பு!

 
தொல்காப்பிய பூங்கா தொல்காப்பிய பூங்கா

சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக மேம்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தொல்காப்பிய பூங்கா

இந்த பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள விரும்புவோருக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.250, மூன்று மாதங்களுக்கு ரூ.750, ஆறு மாதங்களுக்கு ரூ.1,250 மற்றும் ஓராண்டுக்கு ரூ.2,500 என கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் காலை 6.30 முதல் 8 மணி வரையும், மாலை 4.30 முதல் 6 மணி வரையும் நடைபயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். ஒவ்வொரு நேரத்திலும் 300 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுச்சீட்டு முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.crrt.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!