அரசு வேலை ஆசை காட்டி 'ஆப்பு' வைத்த தம்பதி... கணவன், மனைவி 2 பேருக்கும் 2 ஆண்டு சிறை!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற 'வானவில்' பாலா மற்றும் அவரது மனைவி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்து கம்பி எண்ணியுள்ளனர். கடந்த 2024-ஆம் ஆண்டில் அப்பகுதியைச் சேர்ந்த இருவரிடம் சுமார் 2.75 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு, வேலையும் வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தது விசாரணையில் அம்பலமானது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ், மோசடி செய்த தம்பதி இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த வழக்கில் திறம்பட புலனாய்வு செய்து, முறையான சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த போலீஸ் டி.எஸ்.பி. மயில்சாமி தலைமையிலான குழுவினரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் வெகுவாகப் பாராட்டினார். அரசு வேலை மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
